
மரணித்தவர்களை டிஜிட்டல் வடிவில் மீள உருவாக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகள் உலகளவில் கவனம் பெற்றுள்ளன.
பெரிய மொழி மாதிரிகளை (LLM) பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த தொழில்நுட்பம் ‘ஜெனரேட்டிவ் கோஸ்ட்ஸ்’ (Generative Ghosts) என அழைக்கப்படுகிறது.
மறைந்த நபரின் சமூக ஊடகப் பதிவுகள், மின்னஞ்சல்கள், குரல் பதிவுகள் மற்றும் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர் பேசுவது போன்ற டிஜிட்டல் உருவகத்தை இது உருவாக்குகிறது. இதன் மூலம் உறவினர்கள் அவருடன் உரையாடும் அனுபவத்தை பெற முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்த தொழில்நுட்பம் துயரத்தை குறைக்க உதவுமா அல்லது மனிதர்களை கடந்தகால நினைவுகளில் சிக்கவைக்குமா என்பது குறித்து நெறிமுறை மற்றும் உளவியல் ரீதியிலான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.


