
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெற்று வரும் 23-வது பிஃபா உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றில், பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. சியாட்டில் நடைபெற்ற இப்போட்டியின் 9-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் சார்லஸ் டி கெடெலேரே முதல் கோலை அடித்தார். இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் மாலிக் டில்மேன் 31-வது நிமிடத்தில் கோல் அடித்தாலும், அடுத்த இரு நிமிடங்களில் (33′) கெடெலேரே மீண்டும் ஒரு கோல் அடித்து பெல்ஜியத்தை முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியின் 57-வது நிமிடத்தில் ஹான்ஸ் வானாக்கனும், கூடுதல் நேரத்தில் (90+3′) ரோமெலு லுக்காகுவும் தலா ஒரு கோல் அடித்து பெல்ஜியத்தின் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் அமெரிக்கா தொடரிலிருந்து வெளியேறியது.


