
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடர் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர், தற்போது ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் அளவிற்கு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
லீக் சுற்றுகளின் முடிவில் 32 சிறந்த அணிகள் அடுத்த சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்றுக்கு தகுதிபெற்றன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாக்-அவுட் போட்டிகளில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகள் தங்களது எதிரணிகளை வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றான ‘ரவுண்ட் ஆப் 16’ (Round of 16) சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறியுள்ளன.
அதன்படி காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்த அணிகள் விவரம்:-
பராகுவே
பிரான்ஸ்
கனடா
மொராக்கோ
போர்ச்சுகல்
ஸ்பெயின்
அமெரிக்கா
பெல்ஜியம்
பிரேசில்
நார்வே
மெக்சிகோ
இங்கிலாந்து
அர்ஜெண்டினா
எகிப்து
சுவிட்சர்லாந்து
கொலம்பியா
அதிர்ச்சி தோல்விகளுடன் சில முன்னணி அணிகள் வெளியேறியுள்ள நிலையில், இந்த ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ள அணிகளில் எந்தெந்த நாடுகள் காலிறுதிக்கு முன்னேறி கோப்பையைக் கைப்பற்றப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு உலகக் கால்பந்து ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது.
ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மோதும் அணிகள் விவரம்
பராகுவே vs பிரான்ஸ்
கனடா vs மொராக்கோ
போர்ச்சுகல் vs ஸ்பெயின்
அமெரிக்கா vs பெல்ஜியம்
பிரேசில் vs நார்வே
மெக்சிகோ vs இங்கிலாந்து
அர்ஜெண்டினா vs எகிப்து
சுவிட்சர்லாந்து vs கொலம்பியா


