நெய்மரின் வருகையுடன் ஸ்காட்லாந்தை வீழ்த்தி உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘சி’ பிரிவின் இறுதி லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி நாக்-அவுட் சுற்றுக்கு மாஸாக முன்னேறியுள்ளது.

மியாமி ஸ்டேடியத்தில் 64,478 ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நட்சத்திர வீரர் நெய்மர் மீண்டும் பிரேசில் சீருடையில் களம் இறங்கியது ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது. கார்போ அன்செலோட்டியின் பயிற்சியின் கீழ் விளையாடும் பிரேசில் அணி 7 புள்ளிகளுடன் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.

இத்தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 25 வயதான வினிசியஸ் ஜூனியர், இப்போட்டியின் 7-வது மற்றும் 48-வது நிமிடங்களில் கோல்களை அடித்து அசத்தினார்.

இதன் மூலம் தொடரில் 4 கோல்களுடன் எம்பாப்பே மற்றும் ஹாலாண்ட் ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மெஸ்ஸியை விட ஒரு கோல் மட்டுமே அவர் பின்தங்கியுள்ளார்.

ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் மேத்யூஸ் குன்ஹா பிரேசிலின் 3-வது கோலை அடித்தார். ஸ்காட்லாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாத நிலையில், பிரேசில் 3-0 என அபார வெற்றி பெற்றது.