கத்தாரில் 17 வயதுக்குட்பட்டோர் FIFA உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள திகதிகள் அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டிற்கான FIFA 17 வயதுக்குட்பட்டோர் (U-17) உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் நவம்பர் 19 முதல் டிசம்பர் 13 வரை கத்தாரில் நடைபெறும் என FIFA மற்றும் உள்ளூர் ஏற்பாட்டுக் குழு (LOC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

2029 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் இந்தத் தொடரை கத்தார் நடத்தவுள்ளது. அந்த வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு 48 அணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக 2026 பதிப்பையும் கத்தார் மிக பிரம்மாண்டமாக நடத்தத் தயாராகி வருகிறது.

பங்கேற்கும் அணிகள்: மொத்தம் 48 நாடுகள் இந்தத் தொடரில் மோதவுள்ளன. இறுதி குலுக்கல் (Final Draw): மே 21 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறும்.

போட்டிகள் அனைத்தும் அஸ்பயர் ஸோன் (Aspire Zone) வளாகத்தில் உள்ள நவீன வசதிகள் கொண்ட மைதானங்களில் நடைபெறும்.

இறுதிப் போட்டி கலீபா சர்வதேச மைதானத்தில் (Khalifa International Stadium) டிசம்பர் 13 ஆம் திகதி நடைபெறும்.