அல்-ஹிறாவின் 2026 சம்பியனாக றூபி இல்லம் தெரிவு.

(செய்தியாளர், எம்.எஸ்.எம். சஜீ)

காத்தான்குடி, அல்-ஹிறா மகா வித்தியாலயத்தின் 2026ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் முதல்வர் எம்.பீ.எம். றபீக் தலைமையில் பாடசாலையின் ஆற்றங்கரை மைதானத்தில் நேற்று மாலை வெகு சிறப்பாக இடம் பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். அப்துல் ஜவாத் பங்கேற்று சிறப்பித்தார்.
போட்டிகளின் முடிவில், 327 புள்ளிகளைப் பெற்று றூபி இல்லம் முதலாவது இடத்தையும், 319 புள்ளிகளைப் பெற்று எமரல்ட் இல்லம் இரண்டாவது இடத்தையும், 304 புள்ளிகளைப் பெற்று சபயர் இல்லம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.

இதன் போது வெற்றி பெற்ற இல்லங்கள் மற்றும் வீரர்களுக்கான வெற்றிக் கேடயங்கள் அதிதிகளினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.